புதுக்கோட்டை
மாவட்டம் மாங்காட்டில் இந்து சமயஅறநிலையத்துறையின் கண்காணிப்பில் உள்ள
வர்த்தனாம்பிகை உடனுறை விடங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. வரலாற்று
சிறப்புகளைக் கொண்ட இக்கோவிலின் அனைத்து பகுதிகளையும் திருப்பணி
மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதன்பிறகு ஒவ்வொரு நாளும் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 48-வதுநாளை முன்னிட்டு மண்டலபூஜை நடைபெற்றது. இந்த மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கணபதிஹோமத்துடன் 108 சங்கு, புனித தீர்த்தக் குடங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. சுவாமி, அம்பாள், காளபைரவர் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனக்காப்பு சாற்றப்பட்டு மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இரவில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்பாளின் வீதியுலா காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments