புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் இரவு நேரங்களில் சைக்கிள்
அடிக்கட திருடப்பட்டு வந்துள்ளது. இத்தகைய சம்பவம் தொடர்பாக யாரும்
கைதாகவில்லை. இதுதொடர்பாக திருடர்களைப் பிடிக்க கீரமங்கலம் பகுதியில்
இரவுக் காவலராக பணிபுரியும் செல்வநாயகம், இரவு நேரங்களில் கண்விழித்து
சைக்கிளில் உலாவந்தபோதும் யாரும் சிக்கவில்லை.
இதையடுத்து கீரமங்கலம் கடைவீதியில் அதாவது அடிக்கடி சைக்கிள் திருடப்படும் இடத்தில் ஒரு நகைக்கடையின் எதிரே அந்த கடை கேமரா முன்பாக சைக்கிளை நிறுத்திவிட்டு அதன்அருகே மறைந்திருந்துள்ளார்.
கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்தபோது சைக்கிள் அருகே ஒருவர்கூட வரவில்லை. லேசாக இவருக்கு தூக்கம் அசத்தியுள்ளது. விழித்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள் மாயமானது. சுற்றிலும் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அந்தக்கடையின் கேமராவில் பதிந்துள்ள காட்சிகளைப் பார்த்தபோது சுமார் 4. 30 மணிக்கு தலையில் துணியால் முக்காடிட்ட நபர் ஒருவர் திருடியது தெரியவந்துள்ளது. திருடனை பிடிக்க பொறியாக வைக்கப்பட்ட தன்னுடைய சைக்கிளும் திருடப்பட்டது குறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் செல்வநாயகம்.
By கே. சுரேஷ்--செய்தியாளர்

0 comments